சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், சிலை கடத்தல் சம்பவங்க ளில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தபோது நீதிபதியே அதிர்ச்சியடைந்தார். அப்படியென்றால் இதுகுறித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யு மாறு அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிலைகளை பொறுத்தவரை திருடப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு சர்வதேச சந்தையில் பலகோடி ரூபாய்க்கு விற்கப் படுகிறது. சர்வதேச அளவில் இதற்கான வலைப் பின்னல் உள்ளது. இந்த சிலைகளில் சிலவற்றை சட்டப்படி மீட்டு தாயகத்திற்கு கொண்டு வந்துள்ள னர். இந்தநிலையில் சிலை கடத்தல் சம்பவங்க ளில் இரண்டு தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பொன்மாணிக்கவேல் பகிரங்கமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு பேச மறுக்கிறது.
அதேபோல் தமிழக கோவிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் திருப்பி தருவ தற்கு ஒப்புக் கொண்ட நிலையில், ஓய்வு பெற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 300 நாட்களாக தடுத்ததாகவும் பொன்மாணிக்கவேல் கடுமையான புகாரை தெரிவித்தி ருந்தார். இதற்கும் அரசுத்தரப்பில் பதில் இல்லை. சிலைகடத்தல் வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதில் இருந்து யாரையோ பாதுகாக்க முயற்சிக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சென்னை மயிலாப்பூர் கபாலீசு வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் இருந்து பழமையும், தொன்மையும் வாய்ந்த மயில் சிலை, ராகு, கேது சிலைகள் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் அதிகாரிகளை மட்டுமே சிக்கவைக்க முயற்சிகள் நடக்கின்றன.
மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் முதலில் தொழிலதிபர் வேணுசீனிவாசனுக்கு தொடர்பி ருப்பதாக கூறப்பட்டது. அவரும் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.ஆனால் இந்த வழக்கில் இந்து சமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை காவல்துறையினர் கைதுசெய்தனர். பொன். மாணிக்கவேல் செயல்பாட்டில் தமிழக அரசிற்கு உடன்பாடில்லை. அவர் தனித்து செயல்படுகிறார் எனவே சிலைக் கடத்தல் வழக்கு கள் அனைத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் என்னதான் நடக்கிறது. உண்மை யான குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்களா? அல்லது தப்பிவிக்கப்படுகிறார்களா? தமிழகத்தில் கோவில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற அனைத்து உதவிகளையும் அரசுத்தரப்பினர் செய்துதர வேண்டும். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும். கலைநயமிக்க தொன்மையான சிலை களை பாதுகாக்கப்படவேண்டியது அரசின் கட மையாகும். சிலைகள் திருடுபோகாமல் இருக்க கோவில்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியமாகும்.